நடிகர் சிம்பு மீண்டும் மாநாடு படத்தில் நடிக்கிறார?

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்ததன் மூலம் நாயகனாக அறிமுகமானார். மேலும், இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருந்த மாநாடு திரைப்படம் சிம்புவின் அலட்சியத்தால் கைவிடப்பட்டது. இதனையடுத்து, சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, சிம்பு மகாமாநாடு என்ற படத்தை தானே இயக்குவதாக கூறியிருந்தார். அதன்பின் அதுவும் கைவிடப்பட்டது. இந்நிலையில், சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர், மாநாடு படப்பிடிப்புக்கு சிம்புவை ஒழுங்காக வரவைப்பதாக கூறி, தயாரிப்பாளர் சங்கத்தில் உறுதி அளித்துள்ளார். இதனால் அப்படம் மீண்டும் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025