கொரோனா குமார் திரைப்படத்தில் நடிகர் சிம்பு.?

கொரோனா குமார் திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இதில் விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி, சூரி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.
இந்நிலையில், இந்த படத்திலிருந்த கதாபாத்திரங்களுள் ஒன்றை மட்டும் எடுத்துத் தனியாகப் படமாக்கவுள்ளார் கோகுல். இதற்கான கதை, திரைக்கதை அமைக்கும் பணிகள் அனைத்துமே முடிந்து, நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள். படத்திற்கு கொரோனா குமார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தற்போது, இந்த படத்தில் நடிக்க நடிகர் சிலம்பரசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தக் கதையைக் கேட்டுவிட்டு, உடனே சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?
April 26, 2025
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025