பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன்.??
பிரபுதேவா இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சிம்பு ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.
நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரையரங்குகள் திறந்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நதிகளே நீராடும் சூரியன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து பத்து தல என்ற படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நதிகளே நீராடும் சூரியன் படத்தை முடித்து விட்டு நடிகர் சிம்பு பிரபுதேவா இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
பிரபுதேவா ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த எங்கேயும் காதல் படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரபுதேவா தனது 54 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகவுள்ளது.