நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் காலமானார்.
நடிகரும், ஹிந்தி பிக் பாஸ் 13 வெற்றியாளருமான மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனை சித்தார்த் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளது. 40 வயதான சித்தார்த் சுக்லா மாரடைப்பால் உயிரிழந்தார். நடிகர் சித்தார்த் சுக்லா நேற்று இரவு தூங்குவதற்கு முன் சில மருந்துகளை சாப்பிட்டார், அதன் பிறகு அவர் எழுந்திருக்கவில்லை.
கூப்பர் மருத்துவமனையின் அறிக்கையின் படி, சித்தார்த் சுக்லா இன்று காலை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என தெரிவித்தது. சித்தார்த் சுக்லாவின் திடீர் மறைவால் ஒட்டுமொத்த பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி துறையும் சோகத்தில் உள்ளது. அனைத்து நடிகர், நடிகைகளும் சித்தார்த் சுக்லாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சித்தார்த் சுக்லா, பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 13 வது சீசனில் வெற்றி பெற்றார். இது தவிர கத்ரோன் கே கிலாடியின் ஏழாவது சீசனையும் வென்றார். “பாலிகா வடு” சீரியல் மூலம் சித்தார்த் சுக்லா நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் தனது முத்திரையை பதித்தார்.
மும்பையில் 12 டிசம்பர் 1980 இல் பிறந்த சித்தார்த் சுக்லா ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2004 ஆம் ஆண்டில், அவர் தொலைக்காட்சியின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…