நடிகர் ஷமன் மித்ரு கொரோனா தொற்றால் உயிரிழப்பு..!!

Default Image

தொரட்டி திரைப்படத்தில் நடித்த நடிகர் ஷமன் மித்ரு கொரோனா தொற்றால் காலமானார். 

தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான தொரட்டி திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷமன் மித்ரு. இந்நிலையில், 1 மாதத்திற்கு முன்பு நடிகர் ஷமன் மித்ருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து, இன்று சிகிச்சை பலனின்றி நடிகர் ஷமன் மித்ரு உயிரிழந்துள்ளார். மேலும் நடிகர் ஷமன் மித்ரு மறைந்த இயக்குனர் கே.வி ஆனந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்