சட்டவிரோத செயலில் ஈடுபட்டதால் நடிகர் ஷாம் கைது.

சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக நடிகர் ஷாம் உட்பட 13பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
தமிழ் சினிமாவில் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, லேசா லேசா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஷாம். இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு சட்டவிரோத செயலில் ஈடுபட்டதற்காக இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷாம் அவர்கள் தனது வீட்டில் சீட்டு விளையாடி சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, ஷாம் வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அவருடன் 13பேர் சீட்டு விளையாடி கொண்டிருந்ததாகவும், அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகளும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் வணிகர்கள், புதிய இயக்குநர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள் என பலர் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025