நடிகர் சத்யராஜின் அடுத்த திரைப்படம்.? வெளியான சூப்பர் தகவல்.!
சத்யராஜ் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சத்யராஜ் தற்போது சசிகுமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன், மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதை தவிர்த்து சில மலையாள திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அடுத்ததாக தமிழில் அவர் நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
அதன்படி, தமிழில் ஜோக்கர், ஜிப்ஸி போன்ற வித்தியாசமான கதைகளை கொண்ட படத்தை இயக்கிய இயக்குநர் ராஜுமுருகன் அடுத்ததாக இயக்கும் படத்தில் சத்யராஜ் நாயகனாக நடிக்கிறார். தான் இயக்கிய 2 திரைப்படமும் வெற்றியடைய அடுத்ததாக சத்தியராஜை வைத்து படம் இயக்குகிறார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.