பாடகராக களமிரங்கிய நடிகர் சதீஷ்..!பாத்துக்கோங்க ரகுமான் சார் குஷி ட்விட் போட்ட சதீஷ் ..!

- காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சதீஷ்
- ராஜவம்சம்’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகவுள்ளார்
இயக்குநர் கதிர்வேலு இயக்கத்தில் நடிகர் சசிகுமார்,நடிகை நிக்கி கல்ராணி,நடிகர் ராதாரவி,காமெடி நடிகர் யோகி பாபு, சதீஷ்,நடிகர் விஜயகுமார் ,நடிகர் தம்பி ராமையா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராஜவம்சம்.படட்த்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக தற்போது நடைபெற்று வருகின்றன.இம்மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்த படக்குழு அதற்கான பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகிறார் காமெடி நடிகர் சதீஷ். படத்தில் நடிகர் சசிகுமார்,நடிகர் சதீஷ் உள்ளிட்டோர் நடனமாடும் பாடல் ஒன்று இடம்பெறுகிறது அந்த பாடலுக்காக சதீஷ் பாடும் வரிகளை, அவரை வைத்தே படத்தின் இசையமைப்பாளர் பாட வைத்துள்ளார்.
இந்த பாடல் தான் நடிகர் சதீஷ் பாடியுள்ள முதல் பாடலாகும். மேலும், இந்தத் தகவலைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்த நடிகர் சதீஷ், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.ஸுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். மேலும் உங்களுடைய கவனத்துக்கு என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி அனைத்து இசையமைப்பாளர்களின் பெயரையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
???? ???? ???? ???? ????????????
Thank u so much @SamCSmusic bro…. For ur information @gvprakash @anirudhofficial @MusicThaman @arrahman @ThisIsDSP @vijayantony @immancomposer @RSeanRoldan @hiphoptamizha #RajaVamsam pic.twitter.com/s39fPvcxev— Sathish (@actorsathish) February 4, 2020