நடிகை ராதிகாவின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வில்லை நடிகர் சரத் குமார் வருத்தம் !
நடிகர் சரத் குமார் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இந்நிலையில் அவரது மனைவி ராதிகா தற்போது “மார்க்கெட்ராஜா எம்பிபிஎஸ் ” படத்தில் நடித்து முடித்துள்ளார்.அந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார் நடிகர் சரத் குமார் பேசினார். இந்த படத்தை இயக்குனர் சரண் இயக்கியுள்ளார்.அந்த நிகழ்வில் நடிகை ராதிகாவிற்கு “நடிக வேள்” எனும் பட்டம் வழங்க பட்டது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் நடிகை ராதிகாவின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்த அவர் தன்னை பொறுத்தவரை ராதிகா தான் லேடி சூப்பர்ஸ்டார் எனவும் அவர் கூறினார். மேலும் ராதிகாவிற்கு “நடிக வேள்” எனும் பட்டம் மட்டும் போதாது. அவருக்கு பத்ம ஸ்ரீ ,பத்ம பூஷண் விருது கிடைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் “மார்க்கெட்ராஜா எம் பி பி எஸ்” படம் மிக பெரிய அளவில் வெற்றி அடையும் என்றும் அவர் கூறியிருந்தார்.