ஓடிடியை பூஜை அறை என்றும், தியேட்டரை கோவில் என்றும் கூறிய நடிகர் சந்தானம்.!
நடிகர் சந்தானம் தனது பிஸ்கோத் திரைப்படத்தை பார்த்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,ஓடிடியை பூஜை அறை என்றும், தியேட்டரை கோவில் என்றும் கூறி மக்களை தெய்வம் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பிஸ்கோத் “.ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சுவாதி முப்பல்லா ,தாரா அலிஷா , மொட்டை ராஜேந்திரன், ஆனந்த் ராஜ், சௌகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று வெவ்வேறு வேடத்தில் சந்தானம் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ராதன் இசையமைத்து சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், பாடல்களும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது .கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸானது தள்ளி வைக்கப்பட்டது.இந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டதன் காரணமாக தீபாவளி விருந்தாக நேற்று முதல் சந்தானம் அவர்களின் பிஸ்கோத் திரைப்படமும் இந்திய முழுவதும் தியேட்டரில் வெளியாகியது.
சந்தானம் அவர்கள் தனது 400-வது படமான பிஸ்கோத் திரைப்படத்தை ரசிகர்களுடன் இணைந்து சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் பார்த்து மகிழ்ந்தார் . அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சந்தானம்,ஓடிடி என்பது பூஜை அறை போன்றது. தியேட்டர் என்பது கோவில் போன்றது. இரண்டிலும் தெய்வம் உள்ளது. எனது படம் மட்டுமல்ல, அனைத்து படத்தையும் வாழ வைக்கும் தெய்வம் மக்கள் தான் என்று கூறியுள்ளார்.