குக் வித் கோமாளி பிரபலமான புகழ் புதிய கார் வாங்கிய நிலையில் அவருக்கு சந்தானம் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ்.தனது காமெடியால் அனைவரையும் கவர்ந்துள்ள இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.தற்போது சந்தானத்தின் சபாபதி படத்தில் நடித்து வரும் புகழ் அடுத்ததாக அருண் விஜய்யின் 33-வது படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதன் பின் தல அஜித்தின் வலிமை,தளபதி 65, சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களிலும் புகழ் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் 17 லட்சம் மதிப்பிலான காரை வாங்கியுள்ளதாகவும்,தனது பரம்பரையிலையே முதல் கார் என்றும் தனது மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார் . இந்த நிலையில் சபாபதி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் புகழ்
தனது புதிய காரை சந்தானத்திடம் காட்டிய நிலையில் அந்த காரை சந்தானம் ஓட்டிப் பார்த்து, புகழுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார. அதன் பின் சிறிது நேரம் கழித்துப் புகழை அழைத்து,தனது வாழ்த்துகளை தெரிவித்ததுடன் பரிசை ஒன்றை கொடுத்து காரின் முன்பு ஒட்டிக்கொள் என்றும் ஆடி, பி.எம்.டபிள்யூ என நீ வாங்கினாலும் நான் தான் உனக்கு வாங்கித் தர வேண்டும் என்றும் சந்தானம் கூறியுள்ளராம்.
அவர் கொடுத்த பரிசை பிரித்துப் பார்த்தபோது அதில் வெள்ளியில் பிள்ளையார் சிலை ஒன்று இருந்தது. அதைத் தனது காரில் ஒட்டிய புகழ், சந்தானம் அண்ணனின் பரிசு. அண்ணனை எல்லாம் பார்ப்பேனா என்று நினைத்தேன்.ஆனால் இப்போது அவருடனே ஒரு படம் நடிக்கிறேன். அவர் எனக்கு இப்படியொரு பரிசு வாங்கிக் கொடுப்பார் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்று தனது சந்தேகமான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.இந்த முழு விடியோவை தனது யூடுயூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…