மலையாள திரைப்படம் ஆகிய அய்யப்பனுக்கு கோஷியும் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜூ மேனன் அவர்கள் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ஆகிய அய்யப்பனுக்கு கோஷியும் எனும் படத்தின் தெலுங்கு ரீமேக் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தை சாகர் கே.சந்திரா அவர்கள் இயக்குகிறார்கள். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க சமுத்திரக்கனி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்2 மற்றும் ராஜமவுலி இயக்கும் RRR படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சமுத்திரகனி, அய்யப்பனுக்கு கோஷியும் மலையாள படத்தின் .படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பதற்காக என்னை அணுகினார்கள் எனக்கென்று ஒரு நல்ல கதாபாத்திரம் உருவாகியுள்ளதாகவும் கண்டிப்பாக நடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள். இன்னும் எனது கதாபாத்திரம் பற்றி முழுமையாக எனக்கு தெரியாது என்றாலும், மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் என்பதால் நான் சம்மதம் சொல்லி உள்ளேன் என கூறியுள்ள அவர், இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்குவதாக கூறியுள்ளார்.
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…