நடிகர் ரியோ ராஜ் தனது குழந்தையின் புகைப்படத்தை ஆறு மாதங்களுக்கு பின் வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரியோ ராஜ், கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமான இவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது இவர் பிளான் பண்ணி பண்ணணும் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்படவுள்ளது.
இவர் கடந்த 2017ல் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண்குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது தனது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து தனது குழந்தை பிறந்து 6 மாதம் ஆகியதாகவும், எங்கள் மகளின் பெயர் ‘ரிது’ என்றும் அறிவித்துள்ளார் . தற்போது ரசிகர்கள் பலர் இந்த தம்பதியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…
சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…