சிகிச்சைக்காக நாளை இரவு அமெரிக்கா செல்கிறார் சூப்பர் ஸ்டார்..!!
தனது உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் நாளை இரவு அமெரிக்கா செல்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் டப்பிங் பணியும் விரைவில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு ஆகிய முக்கிய நடிகைகள் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனைக்காக நாளை இரவு அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். கொரோனா பெருந்தொற்று இருக்கும் சூழ்நிலையால், மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி கேட்டிருந்த நிலையில், தற்போது மத்திய அரசு அனுமதித்தது தந்ததையடுத்து தனி விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார்.
அமெரிக்காவில் இரண்டாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த ரஜினி உடல் நிலையை பரிசோதித்து கொள்கிறார். அமெரிக்காவில் ரஜினிகாந்த் அங்கு 3 மாதம் தங்கியிருந்து உடல் பரிசோதனையை மேற்கொள்கிறார்.