திருமணநாளில் அப்பாவாக போகும் செய்தியை கூறிய நடிகர் மகத்.!
நடிகர் மகத் தனது திருமண நாளில் தான் அப்பாவாக போவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஜில்லா உட்பட ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் மகத் .அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு அதன் பின் பட வாய்ப்புகள் அதிகம் வந்தது . சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் கடந்தாண்டு பிப்ரவரி 1-ம் தேதி தனது நீண்ட கால காதலியான பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார்.
அந்த வகையில் இன்று தனது திருமண நாளை கொண்டாடும் மகத் ஒரு மகிழ்ச்சியான செய்தியையும் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.அதாவது பிராச்சியின் வயிற்றில் முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து நாங்கள் இருவரும் அழகிய குழந்தையால் ஆசீர்வதிக்கப் பட்டுள்ளோம். இந்த வருடம் மே மாதத்தில் எங்கள் குழந்தை வருவதாகவும், இது போன்ற சிறந்த பரிசை எனக்கு அளித்த பிராச்சிக்கு நன்றி. லவ் யூ” என்று குறிப்பிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து இந்த தம்பதியினருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram