நடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவம்.!
நடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கோலாபூர் பல்கலைக்கழகம் கௌரவித்துள்ளது .
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதவன் . ரசிகர்களால் மேடி என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ,இந்தி , ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார் . சமீபத்தில் இவரது நடிப்பில் நிசப்தம் மற்றும் மாறா ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது மாதவன் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ராக்கெட்டரி என்பதனை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளனர் .ஆம் மாதவன் திரைத்துறையில் அளித்த சேவையை பாராட்டி, அவருக்கு கோலாபூரில் உள்ள டி.ஒய்.பாட்டில் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளனர் . இதுகுறித்து பேசிய மாதவன் ,இந்த தருணத்தை வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.தற்போது நடிகர் மாதவனுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.