நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனருமனா கார்த்திக் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் நடிகர் கார்த்திக் நேற்று இரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது உடனடியாக அவரை சென்னையில் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.