சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் கார்த்தி…??
நடிகர் கார்த்தி அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக பரவும் வதந்திக்கு நடிகர் காளி வெங்கட் முற்றுபுள்ளி வைத்துள்ளார்.
நடிகர் கார்த்தி சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்நது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு 70 % முடிந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கார்த்தியின் 22 படத்தை இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்குகிறார், படத்திற்கு சர்தார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்தி இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் அது வதந்தி என்று நடிகர் காளி வெங்கட் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Not verified https://t.co/gCAoULAPKn
— Kaali Venkat (@kaaliactor) May 23, 2021