இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே – நடிகர் கமலஹாசன்
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக தீவிரமாக இருப்பதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தினக்கூலி தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து நடிகர் கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்.’ என்று பதிவிட்டுள்ளார்.