நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாவதற்கு தயாராகவுள்ளது.ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் க்ளான்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.அடுத்ததாக படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.
இதனையடுத்து,விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் தேதியை மார்ச் 14 – ஆம் தேதி காலை 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள்.
இந்நிலையில்,விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என நடிகர் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:
“நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் “விக்ரம்” உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி முதல்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,படத்தின் Making Glimpse-ஐ கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…