பழையநிலைக்கு சினிமா மாறிவருகிறது திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து இருப்பது மிகவும் சந்தோஷம் என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார்.
நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ளபுதிய திரைப்படம் களத்தில் சந்திப்போம். இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை மஜிமா மோகனும் அருள் நீதிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கரும் நடித்துள்ளார்.
நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தை பற்றி நடிகர் ஜீவா சில விஷியங்களை கூறியுள்ளார்.
அது என்னவென்றால், களத்தில் சந்திப்போம் திரைப்படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். இந்த படத்தை பார்க்க வந்த அனைவர்க்கும் நன்றி. இந்த காலகட்டத்தில் ஒரு நபரை திரையரங்குகளில் வரவழைப்பது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது. இயக்குனர் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் பணியை வெளிச்சம்போட்டு காட்டும் இடமாக திரையரங்குகளில் உள்ளது.
எந்த ஒரு படமும் திரையரங்குகளில் வெளியீட வேண்டும் பெரிய திரையில் பார்க்கும் போதுதான் அதன் பிரம்மாண்டத்தை உணரமுடியும் ஓடிடியில் வெளியானால் அந்த சந்தோஷத்தை கிடைக்காது. ஊரடங்குக்கு பிறகு பல நடிகர்கள் பிசியாக உள்ளனர். நடிகர்களுக்கு தேதி கிடைப்பதில்லை பழையநிலைக்கு சினிமா மாறிவருகிறது திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து இருப்பது மிகவும் சந்தோஷம் என்றும் கூறியுள்ளார்.
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…