மாஸ்டர் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ஜெயம் ரவி!

தளபதி விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு நடிகர் ஜெயம் ரவி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவாகி இன்று உலகம் முழுவதிலும் வெளியிடப்பட்டுள்ள தளபதி விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படத்திற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சாந்தனு மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விஜய் ரசிகர்கள் படத்தை மிக ஆர்வமாக கண்டுகளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஜெயம்ரவி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள மாஸ்டர் படத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பெரிய அளவில் இன்று பாக்ஸ் ஆபீஸில் வெளியிடப்பட்டுள்ள விஜய்யின் மாஸ்டர் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
Wishing @actorvijay na and the team of Master the very best for a grand release and success at the box office today! God bless ???? @anirudhofficial @Dir_Lokesh
— Jayam Ravi (@actor_jayamravi) January 13, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025