இசையமைப்பாளராகும் நடிகர் ஜெய்.! படத்தின் டைட்டில் என்ன தெரியுமா .?

Default Image

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்து முடித்துள்ள திரைப்படத்திற்கு ‘சிவ சிவா’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

நடிகர் ஜெய் , தளபதியின் பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதனையடுத்து சென்னை 28,வாமனன், சுப்பிரமணியபுரம் , வடகறி ,ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் தனது 30வது படத்தை நடித்து முடித்துள்ளார் .

இயக்குனர் சுசீந்திரன் தற்போது சிம்புவின் ஈஸ்வரன் படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும், தற்போது அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததது . எஸ்.ஐஸ்வர்யா என்ற‌ அறிமுக தயாரிப்பாளர் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனாட்சி நாயகியாக நடிக்க சத்ரு, சரத், காளி, பால சரவணன், முத்துக் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் ஜெய் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார் . ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ‘சிவ சிவா’ என்று பெயரிடப்பட்டுள்ளது  .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்