நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று உறுதி!
மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று உறுதி.
தந்தையைப் போல ஸ்டார் அந்தஸ்தில் தமிழ், மலையாளத்தில் ஜொலித்து வரும் நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் துல்கர் சல்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் வீட்டில் தனிமைப்படுத்துக் கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்த தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை, இதனால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தயவுசெய்து முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Positive. pic.twitter.com/cv3OkQXybs
— Dulquer Salmaan (@dulQuer) January 20, 2022