நடிகர் தனுஷ் நடிப்பில் ராட்சசன் பட இயக்குனரான ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தை பான்-இந்தியா திரைப்படமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்தில் நடித்து வருகிறார்.
அதை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடிக்கவுள்ளார் .அதன் பின் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் அவர்களின் படத்தில் தனுஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் அறிவிப்பு ராட்சசன் படத்தின் வெற்றிக்கு பின் ராம்குமார் அறிவித்திருந்தார்.இதன் ஆரம்ப பணிகள் கடந்த ஆண்டிலிருந்து நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது .தற்போது தனுஷ்-ராம்குமார் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி பதிப்பிலும் உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.அதாவது இந்த படத்தை பான்-இந்தியா திரைப்படமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே தனுஷ் தமிழில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் முன்னணி நடிகராக கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…