கடந்த 2015 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.இந்த அணி நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது. இதனையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.
இரு அணிகள் போட்டி:
அதன்படி, தலைவர், இரு துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டன. மொத்தம் பதிவான 2500 வாக்குகளில் சுமார் 1150 வாக்குகள் தபால் மூலம் பதிவு செய்யப்பட்டன.
நீதிமன்றம் உத்தரவு:
இந்த தேர்தல் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து நாசர், விஷால் ஆகியோர் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் செல்லும் என்றும், ஓட்டுகளை எண்ணவும் உத்தரவிட்டது.
வெற்றி:
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்கள் முன்னிலையில்,நேற்று முன்தினம் எண்ணப்பட்டது.
பின்னர்,நடிகர் தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில்,பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி பெற்றுள்ளார்.பாண்டவர் அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றுள்ளார்.மேலும்,அதே அணி சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி,துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பதவியேற்பு:
இந்நிலையில்,தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் இன்று பதவியேற்கவுள்ளனர்.அதன்படி,நாசர் நடிகர் சங்க தலைவராகவும்,பொதுச்செயலாளராக விஷாலும்,மற்றும் வெற்றி பெற்ற மற்ற நிர்வாகிகளும் இன்று பதவியேற்க உள்ளனர்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…