5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல சீரியல் நடிகர் கைது..!

Default Image
  • சகநடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல சீரியல் நடிகர் கைது.
  • பியர்ல் புரியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாகின் 3 என்ற இந்தி சீரியலில் நடித்து பிரபலமான நடிகரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டவருமான பியர்ல் புரி என்ற நடிகர் அவருடன் நடித்த சக நடிகையின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பியர்ல் புரி மும்பையில் வசித்து வருகிறார். 2019 இல் இவருடன் நடித்த நடிகை சம்பவம் நிகழ்ந்த அன்று தனது மகளை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துவந்துள்ளார்.

அங்கு வந்த 5 வயது சிறுமிக்கு பியர்ல், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இதுகுறித்து சிறுமியின் தந்தை மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் இந்த புகார் சம்பவம் நடந்த வசாய் பகுதி வாலிவ் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு இவர்கள் விசாரணை நடத்தி, அம்போலி போலீஸ் உதவியோடு நடிகர் பியர்ல் புரியை கைது செய்தனர்.

கற்பழிப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கை பதிவு செய்தனர். வசாய் கோர்ட்டில் நடந்த விசாரணையில் இவரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்