நடிகரும்,விமர்சகருமான வெங்கட் சுபா இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றானது மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது.குறிப்பாக,கடந்த சில வாரங்களாகவே திரையுலகைச் சேர்ந்த பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.
அந்த வகையில்,நடிகரும்,பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் சுபா,கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு,சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி வெங்கட் சுபா இன்று உயிரிழந்தார்.
வெங்கட் சுபா பல்வேறு டிவி தொடர்களில் நடித்துள்ளார்.யூ டியூப் சேனலில் சினிமா விமர்சனம் செய்து வந்தார்.மேலும், மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து,மறைந்த வெங்கட் அவர்களின் குடும்பத்திற்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். எனினும்,கொரோனாவால் அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் உயிரிழந்து வரும் சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…