நடிகர் அஜித் பழகுவதற்கு தலை சிறந்த மனிதர்! பிரபல இயக்குனரின் அதிரடியான ட்வீட்!
- நடிகர் அஜித் பழகுவதற்கு தலை சிறந்த மனிதர்.
- இயக்குனர் கிரணின் அதிரடியான ட்வீட்.
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நாள்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் அஜித்தை பொறுத்தவரையில், மனிதர்கள் மட்டுமல்லாமல், திரையுலகில் முன்னணி இடத்தில இருக்கும் நடிகர்கள் கூட அவருக்கு ரசிகர்களாக தான் உள்ளனர். இதனையடுத்து, இயக்குனர் கிரண், காப்பான், அனேகன், கவண் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கலை இயக்குனராக இருந்தவர்.
இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பழகுவதற்கு தலை சிறந்த மனிதர் அஜித் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் அதனை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.