பெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்திற்கு நடிகர் அஜித் ரூ.10 லட்சம் நிதி உதவி..!!
பெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு உதவ அஜித் 10 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பதன் காரணமாக திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனால் திரைப்பட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது பெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு நடிகர் அஜித் குமார் 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி இன்று செய்தியாளர்களிடம் பேசியபொது தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு நேற்று நடிகர் அஜித்குமார் தமிழக கொரோனா நிவாரணத்திற்கு நிதியாக RTGS மூலகமாக ரூ.25 லட்சம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.