மோகன் லால் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக பரவி வந்த தகவல் வதந்தி என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான 10 நாள் படப்பிடிப்பு மட்டும் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த இயக்குனருடன் அஜித் கூட்டணி அமைக்கப்போகிறார் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அஜித்தின் அடுத்த திரைப்படத்தையும் ஹெச் வினோத் இயக்குவதாக தகவல்கள் பரவி வந்தது.
ஆனால், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், நடிகர் அஜித் அடுத்ததாக நடிகர் மோகன் லால் இயக்கும் ஒரு மலையாள திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு நிதி காக்கும் பூதம் என்று பெயர் வைத்துள்ளதாகவும் முழுக்க முழுக்க 3 டியில் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது.
இது குறித்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் , படத்தில் நடிப்பதற்காக இதுவரை யாரையுமே அணுகவில்லை. ஆகையால் இந்தச் செய்தி வெறும் வதந்தி தான் என்று படத்தின் தரப்பிலிருந்து குறியுள்ளனர். இதனை தொடர்ந்து அஜித்தின் 61 வது படத்தையும் இயக்குனர் ஹெச் வினோத் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…