வீங்கிய வயிற்றுடன் உயிருக்கு போராடும் நடிகர் அபினய்! கல்லீரல் நோயால் அவதி…

துள்ளுவதோ இளமை படம் மூலம் பிரபலமான அபிநய் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Actor Abhinay

சென்னை : தனுஷின் ‘துள்ளுவதோ இளமை’, தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள நடிகர் அபினய் (43), ‘Liver Cirrhosis’ (கல்லீரலின் சிரோசிஸ்) எனப்படும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வறுமையில் வாடி வரும் அவர் எலும்பும் தோலுமாகவும், வயிறு வீங்கியபடியும் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரூ.15 லட்சத்துக்கு மேல் செலவு செய்து சிகிச்சை பெற்று வரும் அவர், மேல் சிகிச்சைக்காக ரூ 28.5 லட்சம் உதவி கேட்டுள்ளார்.

நடிகர் அபினய் சில படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்திருந்தாலும் அந்த படங்கள் பெரிய அளவுக்கு கைகொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். நாளடைவில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளும்  பறிபோகே, சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால் வறுமையின் உச்சியில் சிக்கினார்.

இப்படி இருக்கையில், வெளியில் கூட தலைகாட்டாமல் இருந்து வந்த அபினய், வறுமையின் உச்சத்தில் இருப்பதாகவும் சாப்பிட கூட வழியில்லாமல் அம்மா உணவகத்தில் தான் சாப்பிட்டு வருவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

ஒருசில தனியார் ஊடகங்களிலும் இதை பற்றி பேட்டி அளித்துள்ளார். இந்த நிலையில், திடீரென்று வயிறு வீங்கி மிக மோசமாக உடல் மெலிந்து பார்க்கவே கொடூரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தற்பொழுது, கல்லீரல் நோயால் சிகிச்சை பெற்று வரும் அபினயிக்கு துள்ளுவதோ இளமை படத்தின் சக நடிகர் இப்பொது உச்சத்தில் இருக்கும் தனுஷ் செய்வாரா என்று பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்