ஹிப்ஹாப் ஆதி இசையில் விஷால் – தமன்னா நடித்து வரும் ஆக்சன் படத்திலிருந்து வெளியான புதிய பாடல்!
தமிழ் சினிமா நடிகரும் தமிழ் திரைப்பட சங்கங்களில் மிகவும் பிஸியான பிரமுகருமான விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ஆக்சன். இந்த படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளார். இப்படத்தை ட்ரெண்டியன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்ட நிலையில் இப்படம் நவம்பரில் ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார். இப்படத்திலிருந்து நீ சிரிச்சாலும் எனும் பாடல் வெளியாகியுள்ளது. பா.விஜய் இப்பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.