கர்ணன் படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!!

தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக கர்ணன் படத்தின் டிரைலர் படக்குழுவினர் ரிலீஸ் செய்யாமல் படத்தை வெளியீடவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக படத்தின் டைட்டில் கர்ணன் என்று வைக்க கூடாது என்று சிவாஜி ரசிகர்கள் கடந்த ஆண்டு கூறிவந்தார்கள். அதனை தொடர்ந்து கடந்த மாதம் படத்திலிருந்து பண்டாரத்தி புராணம் பாடல் குறிப்பட்ட சமூகத்தை சார்ந்தது என்பதால் படத்திலிருந்து பாடலை நீக்க கோரி வழக்கு தொடர பட்டது. இதனால் பண்டாரத்தி புராணம் பாடலை மஞ்சனத்தி புராணம் என்று படக்குழுவினர் மாற்றினார்கள்.
அதற்கு பிறகு இருந்து டீசர் மட்டுமே வெளியான நிலையில் டிரைலர் என் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில், அதற்கான விளக்கம் தற்போது படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆம், இது போன்று தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக படத்தின் டிரைலர் படக்குழுவினர் ரிலீஸ் செய்யாமல் படத்தை வெளியீடவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கர்ணன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை பார்க்க தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025