அஜித்துடன் நடிப்பது என் வாழ்நாள் லட்சியம் – ஹர்ஷிகா..!!
நடிப்பது எனது வாழ்நாள் லட்சியம் அதற்காக ஆவலுடன் காத்துள்ளேன் என்று கன்னட நடிகையான ஹர்ஷிகா பூனாச்சா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். ரசிகர்கள் மன்றம் இல்லாவிட்டாலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். மேலும் அஜித்தை பலர் புகழ்ந்து கூறுவது உண்டு சில நடிகைகள் அவருடன் நடிக்கவும் ஆவலாக இருப்பதாகவும் கூறுவது உண்டு அந்த வகையில், பிரபல கன்னட நடிகையான ஹர்ஷிகா பூனாச்சா தனது ட்வீட்டர் அஜித்குமார் பற்றி சில விஷியங்களை கூறியுள்ளார்.
இதில் இவர் கூறியிருப்பது, அஜித்தின் பெயரில் ஒரு பவர் இருக்கிறது. அவருடைய ரசிகையாக இருப்பதே எனது பலம். அவருடன் நடிப்பது எனது வாழ்நாள் லட்சியம். அதற்காக ஆவலுடன் காத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். மேலும் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். 95 % படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், மீதிக்கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் 10 நாட்கள் மட்டும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
“I feel the strongest in the world coz I’m a #Thala fan”
– Kannada Actress @actressharshika ????#Valimai #ValimaiFirstLookOnMay1st pic.twitter.com/T4wvMCb2F4
— Karthick????Csk???? (@siva_karthick7s) March 17, 2021