தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் தீவிரமாக நடித்து வரும் நித்யாமேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் த அயன்லேடி படத்தில் நடிக்கவும் இருக்கிறார். அவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் தென் இந்திய மொழி படங்களில் நடித்து நல்ல பெயர் சம்பாதித்து விட்டேன். ஹிந்தியில் மிஷன் மங்கள் படம் மூலம் அறிமுகம் கிடைத்து நிறைய விருதுகளையும் வாங்கி இருக்கிறேன். ஆனால் தேசிய விருது மட்டும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஒரு நடிகையாக தேசிய அளவில் அடையாளம் காணப்படுவது சந்தோஷமான விஷயம். ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஒரு படத்தில் நடித்து அதில் எனது நடிப்புக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு தேசிய விருது வாங்கி கொடுக்கும் படம் வழக்கமான கதையாக இருக்க கூடாது. வித்தியாசமாக இருக்க வேண்டும், அப்படியென்றால்தான் அதில் நான் நடிக்கவே செய்வேன்.
மேலும் சினிமாவில் எனது பயணம் முடிந்து விடவில்லை. இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஏதாவது ஒரு படத்தில் நிச்சயம் தேசிய விருது வாங்குவேன். எப்போதும் என்னை புதிதாக நடிக்க வந்த நடிகை மாதிரியே பார்க்கிறேன். 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று நினைப்பதே இல்லை. இப்போது சினிமாவுக்கு வந்த மாதிரிதான் தினமும் நினைத்து பார்க்கிறேன் என நித்யா மேனன் தெரிவித்தார்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…