மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் இன்று மாலை 6 மணி அளவில் வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். கொரோனா காரணமாக மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வராமல் இருக்கிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இதனிடையே, சென்ற தீபாவளி தினத்தன்று ரசிகர் பெரும் எதிர்பார்ப்பில் மாஸ்டர் படத்தின் டீசர் தமிழில் வெளியாகி இந்திய அளவில் பல சாதனைகளை படைத்தது வருகிறது. மாஸ்டர் டீசர் யூடியூபில் அதிகம் கமெண்ட், லைக்ஸ், அதிவேக வீவ்ஸ் என பல சாதனைகள் படைத்துள்ளது. ட்ரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டீசரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு விருது அளித்தது. அண்மையில், ட்விட்டர் இந்திய மாஸ்டர் திரைப்படம் நடப்பாண்டு அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தகத்து.
அதுமட்டுமில்லாமல், நெய்வேலியில் எடுக்கப்பட்ட விஜய் புகைப்படம் அதிக ரீட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் இன்று மாலை 6 மணி அளவில் வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தமிழில் வெளியாகி பல சாதனைகள் படைத்த மாஸ்டர் டீசர், தெலுங்கிலும் சாதனை படைக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…
மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை…
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…
சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…