இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஆச்சி மனோரமா நினைவு தினம் இன்று …!

Default Image

இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஆச்சி மனோரமா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

1937 ஆம் ஆண்டு மே 26ம் தேதி மன்னார்குடியில் பிறந்தவர் தான் கோபிசாந்தா. ஆனால், நாம் தற்பொழுது அவரை ஆச்சி மனோரமா என அன்போடு அழைக்கிறோம். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாகிய மறைந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநிலத்தின் முதல்வர் என்டிஆர் ஆகியோருடன் நடித்த பெருமைக்குரியவர் மனோரமா.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற இவர், கலைத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்,ரீ கலைமாமணி, தேசிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என பல விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். தமிழ் திரையுலகில் பெரும் சாதனை படைத்த மனோரமா தனது 78 வது வயதில் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்