ஆயுர்வேத படி தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எந்த உணவுகளை உண்ண வேண்டும்.! 

Default Image

பெண்களின் பாலூட்டும் சக்தியை இயற்கையாக அதிகரிக்க நீங்கள் உட்கொள்ளக்கூடிய சில ஆரோக்கியமான உணவு பொருட்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தாய்ப்பாலை நன்றாகக் குடித்து வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் பெரும் பாரத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதிபெறுவார்கள். குறைந்த ஊட்டச்சத்து, ஹார்மோன் தொந்தரவு போன்ற சில காரணங்களால், சிலருக்குத் தாய்ப்பால் தேவையான அளவு சுரப்பதில்லை.

இந்நிலையில், கீழ்க்காணும் உணவுமுறையை பின்பற்றுவதன் மூலம் தாய்ப்பாலை பெருக்கலாம். குறைந்த பால் உற்பத்தியால் அவதிப்பட்டு, புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது கடினம் எனில் அவர்களுக்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சில வழிகள் உதவியாக இருக்கலாம்.

Shatavari

சதாவரி:

அஸ்பாரகஸ் தாவரத்தின் ஒரு வகை தான் சதாவரி, இது ஆயுர்வேதத்தில் நன்கு அறியப்பட்ட மூலிகையாகும். பெண் இனப்பெருக்க அமைப்பை ஆரோக்கியமாக மாற்றுவது மட்டுமில்லமால் இந்த ஆயுர்வேத மூலிகை தாய்ப்பால் திறனையும் அதிகரிக்கிறது.

 inji poondu

இஞ்சி மற்றும் பூண்டு:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலிருந்து பல நோய்களில் இருந்து காப்பாற்றுவது வரை இஞ்சி மற்றும் பூண்டு தங்களது பங்கை வகுக்கிறது. குழ்நதை பெற்ற தாய்மார்கள் பொதுவாக குழந்தை பிறந்த பிறகு முதல் மாதத்திற்கு இஞ்சி மற்றும் பூண்டு சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். தாய்ப்பால் சீராக உற்பத்தி ஆக  இவை இரண்டும் அவசியமாக இருக்கிறது.

Fennel

பெருஞ்சீரகம்:

குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு பால் சுரப்பு சில சமயங்களில் குறைந்து விடும். தாய்பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் தாய்மார்கள் பெருஞ்சீரகத்தை அவ்வப்போது சேர்த்து கொள்வது நல்லது. இதிலுள்ள ‘அனீதோல்’ எனப்படும் வேதிப்பொருள், பெண்களில் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை தூண்டி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.

இலவங்கப்பட்டை:

இலவங்கப்பட்டை மற்றொரு பிரபலமான மூலப்பொருள் ஆகும். போதிய தாய்ப்பால் இல்லாமல் இருக்கும் பெண்கள் இதை அதிகம் எடுத்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். சிறிது இலவங்கப்பட்டையை எடுத்துக் கொண்டு சுடு தண்ணீரில் போட்டு தேன் கலந்து பருகி வர, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

Almond

பாதாம் பருப்பு

இரவில் நான்கு ஐந்து பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் அந்த பாதம் பருப்புகளை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு பெண்களின் உடல் வலிமையும் அதிகரிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi