#BREAKING: உக்ரைனில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் தஞ்சம் ..!
ரஷ்ய படைகளின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் வெளியேறி போலந்தில் தஞ்சம்.
ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள உக்ரைன் உலகம் முழுவதிலும் பலரிடம் உதவி நாடியது. ஆனால் இதுவரை உக்ரைனுக்கு எந்த பெரிய நாட்டிலிருந்தும் நேரடி உதவியைப் பெற முடியவில்லை. ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையே 3-வது நாளாக தாக்குதல் நீடிக்கும் நிலையில் அங்குள்ள மக்கள் உயிருக்கு அஞ்சி உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் உக்ரைன் எல்லையை கடந்துள்ளனர் என போலந்து அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்-ல் இரு படைகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் வெளியேறி வருகின்றனர்.