சுமார் 2,99,27,246.82 கோடி மதிப்புள்ள பிரபல கால்பந்து வீரரின் கார் விபத்தில் சிக்கியது ! இருவர் கைது
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பிரபல கால்பந்து வீரரான லைஸ் மோஸேட்ஸின் கார் விபத்தில் சிக்கியுள்ளது,அதிஷ்டவசமாக அவர் அந்த காரில் பயணிக்கவில்லை என்றும் 20 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு ஆரஞ்சு லம்போர்கினி காரில் இரு இளைஞர்கள் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியுள்ளனர்.திங்கள்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நடந்துள்ளது,சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது மோதியுள்ளனர்.நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியதாக சந்தேகத்தின் பேரில் 20 வயதில் இருவர் கைது செய்யப்பட்டனர்.காவல்துறையின் விசாரணைக்கு பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிய லம்போர்கினி காரின் மதிப்பு சுமார் £300,000 பௌண்டாகும் அதாவது இந்திய மதிப்பில் 2 கோடியே 99 லட்சமாகும் .இந்த விபத்துக்கும் லைஸ் மோஸேட்ஸக்கும் ஏதும் தொடர்பு உள்ளதா என்பதை அவர் விளையாடும் கிளப் Sheffield United F.C. விசாரித்து வருகிறது.