உலகின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அபி அகமது அலி..!!! எத்த்யோப்பியா-எரிட்ரேயா மக்கள் மகிழ்ச்சி…!!!
- வெடி மருந்தை கண்டுபிடித்த ஆல்பிரட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு இவருடைய பெயரிலேயே பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
- இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதில் இந்த பரிசிற்கு தகுதியான நபராக எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி (43) அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார்.இவர் எத்தியோப்பியாவின் நான்காவது பிரதமராக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற அபி அக மது அலி அண்டைநாடான எரிட்ரேயா அதிபருடன் மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளாலும் எத்தியோப்பியா நாட்டு மக்களின் வாழ்வாதரத்தை வளப்படுத்தவும், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவும் ஆற்றிய சீரிய பணிக்காக அவருக்கு நோபல் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அறிவிக்கப்பட்ட பரிசு வழங்கும் நிகழ்ச்சி நார்வே தலைநகர் ஒஸ்லோ-வில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்டார். அப்போது பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.