அப்துல் கலாம் பிறந்த நாள் விழா…!இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட பள்ளி கல்வித் துறை இயக்குனர் முடிவு …!
அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட பள்ளி கல்வித் துறை இயக்குனர் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்ட சுற்றறிக்கையில், அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும்.மேலும் இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .அப்துல் கலாம் தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே கட்டுரை போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கையில் பள்ளி கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.