ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த ஆரோன் பிஞ்ச்!
நேற்று நடந்த போட்டியில் இலங்கை ,ஆஸ்திரேலிய அணி மோதியது. இப்போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை பறி கொடுத்து 334 ரன்கள் குவித்தனர்.அடுத்ததாக களமிறங்கிய இலங்கை அணி 45.5 ஓவர் முடிவில் 247 ரன்கள் சேர்த்து இலங்கை 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய கேப்டன்களில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ஆரோன் பிஞ்ச் முதலிடத்தில் உள்ளார். 2003 -ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய அணிக்கு எதிராக 140 ரன்கள் அடித்தார்.அதுவே உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி கேப்டன்களில் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.
அந்த சாதனையை நேற்றைய போட்டி மூலம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 132 பந்திற்கு 153 ரன்கள் குவித்து முறியடித்தார். அதில் 15 பவுண்டரி, 5 சிக்ஸர் அடங்கும்.
Ponting’s 140* v IND, 2003
Finch 153* vs sl, 2019