பிக்பாஸ் அனிதாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி.!
பிக்பாஸ் பிரபலமான அனிதா சம்பத்தின் வீட்டிற்கு ஆரி திடீரென சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் .இதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர் .
அதிலும் தனிப்பட்ட முறையில் விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் அனிதா சம்பத் .இவர் பிக்பாஸிலிருந்து வெளியேறிய சில நாளில் அவரது தந்தை இறந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் பிக்பாஸ் வின்னரான ஆரி அனிதா சம்பத்தின் வீட்டிற்கு திடீரென சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் .அதன் பின் அவரது குடும்பத்தினருடன் ஆரி எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram