பிக்பாஸ் கால் சென்டரில் ஊழியராக வேலை செய்யும் ஆரியிடம் நீங்க உண்மையாகவே யாரையும் காலி பண்ண நினைக்கலையா என்று பாலாஜி பல கேள்விகளை கேட்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் .அந்த வகையில் கடந்த வாரம் கால் சென்டராக மாறிய பிக்பாஸ் வீட்டில் கால் சென்டர் ஊழியராக பாலா, சம்யுக்தா, ஷிவானி,அஜீத்,கேபி, ஜித்தன் ரமேஷ் ,அனிதா ஆகியோர் வேலை செய்ய அவர்களை மற்ற போட்டியாளர்கள் கேள்வி கேட்க பிக்பாஸ் வீடே சண்டை களமாக மாறியது.க்ஷ.இந்த நிலையில் இந்த வாரமும் கால் சென்டர் டாஸ்க் தொடர்கிறது.இதில் கால் சென்டரில் வேலை செய்யும் ஊழியர்களாக நிஷா, அர்ச்சனா,ஆரி,சனம்,ரியோ,சோம் ஆகியோர் உள்ளனர்.அவர்களிடம் வாடிக்கையாளர் கேட்கும் கேள்விகளுக்கு வரம்பு எதுவும் இல்லை அவ்வாறு வாடிக்கையாளர்கள் ஊழியரை வெறுப்பேற்றும் படி பேசி அவரே போன் காலை துண்டிக்கும் படி செய்ய வேண்டும்.இல்லையெனில் அவர்கள் நேரடியாக நாமினேஷனுக்கு நாமினேட் செய்யப்படுவார்கள்.
அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் நேருக்கு நேர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் பிக்பாஸ் கால் சென்டரில் ஊழியராக உள்ள ஆரியிடம் பாலாஜி கால் செய்து பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே நான் உங்க ரசிகன் .நான் யாரையும் காலி பண்ண மாட்டேன்,எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விளையாட வேண்டும் என்று நினைப்பதாக நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள், நீங்கள் உண்மையாகவே யாரையும் காலி பண்ண நினைக்கலையா ,நான் கெட்டவனு சொல்றவன நம்பலாம் ,நான் நல்லவனு சொல்றவன கூட நம்பலாம் . ஆனால் நான் மட்டும் தான் நல்லவனு சொல்றவன நம்பவே முடியாது என்று பாலாஜி கூறுகிறார்.சிரித்த முகத்துடன் இருந்த ஆரி பாலாஜி கேள்விக்கு பின்னர் முகத்தில் இருந்த சிரிப்பு காணமல் போய் விட்டது.இன்றும் பிக்பாஸ் சம்பவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…