பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ஆராட்டு டிரைலர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் மோகன்லால் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுகிறார்.
நகைச்சுவைகளுடன், மாஸ் காட்சிகளிலும் ரசிகர்களை மகிழ்விப்பவர் மோகன்லால். ஆம் இத்திரைப்படம் ஆக்ஷன் கலந்த நகைச்சுவையாக உருவாகியிருக்கிறது.
இப்படம், வருகிற 10 ஆம் தேதி வெளியாகும். மலையாளத் திரைப்பட விமர்சகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோகன்லால் திரைப்படம் ‘ஆராட்டு’. படத்தின் முழுத் தலைப்பு ‘நெய்யாற்றின்கரை கோபனின் ஆராதனை’ என்பதாகும்.
இப்படத்தில், இசை புயல் ஏ. ஆர். ரகுமானும் இணைந்துள்ளார். அட ஆமாங்க.. இப்படத்தில் ஒரு பாடலில் மோகன்லாலுடன் ரஹ்மான் தோன்றுவதாக கூறபடுகிறது. மலையாளத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் பாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இப்படத்திற்கு ராகுல் ராஜ் இசையமைத்துள்ளார்.
இதற்கிடையில், ஏ. ஆர். ரகுமான் ‘யோதா’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தின் நாயகன் மோகன்லால். இதன் பிறகு ரஹ்மான் நேரடியாக மலையாளத்தில் இசையமைக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படத்தில் நெடுமுடி வேணு, சாய் குமார், சித்திக், விஜயராகவன், ஜானி ஆண்டனி, இந்திரன்ஸ், நந்து, ஷீலா, ஸ்வாசிகா, மாளவிகா, ரச்சனா நாராயணன்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் நெய்யாற்றின்கரை கோபன் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளார். கோபன் தனது சொந்த ஊரான நெய்யாட்டின்கராவிலிருந்து பாலக்காட்டில் உள்ள தனது கிராமத்தை ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுடன் அடைவதும் அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளும்தான் படத்தின் கதைக்களம்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…