நடிகை பீரவீணா திருவனந்தபுரத்தில் உள்ள கரமனையில் வசித்து வரும் இவர் குழிகளை வளர்த்து வரும் கூட்டின் அருகே நல்ல பாம்பு ஒன்றை கண்டு பயந்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களிலும், சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரவீணா. இவர் மலையாளத்தில் இங்கிலீஷ் மீடியம், ஹஸ்பன்ட் இன் கோவா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். மேலும் பல மலையாள சீரியல்களிலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி என்னும் தொடரிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் ரவிக்கு அம்மாவாக நடித்திருந்தார். இது மட்டுமில்லாமல் பல நடிகைகளுக்கு குரலும் பேசியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள கரமனையில் வசித்து வரும் இவர் குழிகளை வளர்த்து வரும் கூட்டின் அருகே நல்ல பாம்பு ஒன்றை கண்டு பயந்துள்ளார். உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புரா பாம்பு பூங்கா நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தவுடன் ஊழியர்கள் விரைந்து வந்து பிறந்து 2நாட்களே ஆன நல்ல பாம்பை கண்டு பிடித்தனர். அதனையடுத்து அந்த ஊழியர்கள் பீரவீணாவின் கைகளில் பாம்பு குட்டியை கொடுக்க, முதலில் நடுக்கத்துடன் வாங்கிய பிரவீணா அதனையடுத்து பயமின்றி கொஞ்சினார். மேலும் பாம்புகளை கண்டதும் கொல்லாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதை எல்லாம் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…