நமது வீட்டின் நற்பலனுக்கு பயன்படும் சில முக்கிய ஆன்மீக குறிப்புகள் இதோ!

Default Image

அமாவாசை, பௌர்ணமி, மாத பிறப்பு, ஜென்ம நட்சத்திர நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.

தேங்காய், பூசணி போன்றவைகளை பெண்கள் உடைக்க கூடாது. கர்ப்பமான பெண்கள் தேங்காய், பூசணி உடைக்கும் இடங்களில் நிற்கவே கூடாது.

செய்வாய், வெள்ளிகளில் நிலைக்கதவில் மஞ்சள் பூசவேண்டும். அது நம் வீட்டில் தீய சக்திகள் உள்ளே வராமல் தடுக்கும். விஷ பூச்சிகள் வீட்டில் அண்டாது.

சனி பகவானுக்கு வேண்டி எள்விளக்கு வீட்டில் ஏற்றக்கூடாது.

வீட்டில் யாரேனும் தூங்கிக்கொண்டிருந்தால் விளக்கேற்ற கூடாது. அவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும்.

சாமி படத்திற்கு சூடியிருந்த வாடிய பூக்களை குப்பையில் வீசக்கூடாது. அவைகளை கால்படாத இடத்தில் போடவேண்டும். ஆற்று பகுதிகளில் போடுவது நல்லது.

செய்வாய் வெள்ளி கிழமைகளில் வெண்ணையை உருக்கக்கூடாது. ஏனெனில் அன்றைய தினங்கள் மஹாலக்ஷ்மிக்கு உகந்தநாள். வெண்ணை மகாலட்சுமிக்கு உகந்தது ஆதலால் வெண்ணையை அந்நாளில் உருக்க கூடாது.

வெற்றிலை பாக்கு சாமிக்கு படைக்கும் போது வெற்றிலை எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

சாமிக்கு பூ அலங்காரம் செய்யும் போது, மிகுந்த பக்தியில் முழுப்படமும் மறையும் வண்ணம் அலங்காரம் செய்ய கூடாது. கடவுளின் பாதமும் முகமும் மறையாத படி பூ அலங்காரம் செய்ய வேண்டும்.

விளக்கின் தீப ஒளி மூலம் ஊதுவத்தி ஏற்ற கூடாது. விளக்கின் மூலம் இன்னொரு விளக்கை ஏற்றக்கூடாது. இன்னொருவர் விளக்கு அணையும் தருவாயில் இருந்தால், அதனை நீங்கள் ஏற்றி வைக்கலாம்.

விளக்கேற்ற உகந்த நேரம் காலை 4.30 மணி முதல் – 6 மணி வரை. மாலை 5.30 – 6.00 மணி வரை ஆகும்.  அதே போல எவர்சில்வர் விளக்கில் தீபம் ஏற்ற கூடாது. வெள்ளி, பித்தளை, அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது உகந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்