முன்னேறுவதற்கு உங்களுக்கு தேவையான கடன் தொகை கிடைக்க வேண்டுமா? இந்த பொருளை எடுத்துச்செல்லுங்கள்!

- சொந்தமாக தொழில் செய்து முன்னேற விரும்புவோருக்கு பக்கபலமாக இருப்பது அவர்கள் எதிர்பார்த்த கடன் தொகையே ஆகும்.
- அந்தக் கடன் தொகையானது எந்தவித தங்கு தடையின்றி கிடைப்பதற்கு உரிய பரிகாரத்தை செய்தால் போதும்.
பலருக்கு தொழில் தொடங்க சேமித்து வாய்த்த பணத்தொகை இருக்கும். அல்லது தனது பரம்பரை சொத்தில் செய்ய ஆரம்பிப்பார்கள். சிலர் தொழிலில் நல்ல அனுபவம் இருந்தும் தகுந்த நேரத்தில் உரிய தொகை கிடைக்காததால் மிகவும் மன வருத்தத்தில் இருப்பார்கள். தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அதற்காக குறிப்பிட்ட தொகை வேண்டும் என மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் விரும்பிய நேரத்தில் கடன் தொகை கிடைக்காது.
இந்த பிரச்சனையை தீர்க்க சில பரிகாரம் உண்டு. அதனை செய்தால் இந்த பிரச்சனை சுலபமான தீர்ந்துவிடும். பொதுவாக பணத்திற்கு தேவை என்பதால் அதற்கு அதிபதியாக இருக்கும் புதன் பகவானை வணங்கி செல்வார்கள். ஒரு சதுர வடிவிலான அரக்கு நிற துணியை எடுத்து கொள்ள வேண்டும்.
அதில் ஒரு ஸ்பூன் அளவு வெந்தயம் எடுத்துக்கொண்டு சிகப்பு கலர் நூலினால் ஒரு கோழி குண்டு போல சுருட்டிக்கொள்ள வேண்டும். இந்த மூட்டையை தங்கள் கடன் கேட்டு செல்லும் முன்னர் உள்ளங்கையில் வைத்து புதன் பகவானை வேண்டிக்கொள்ள வேண்டும். அந்த சிறிய மூட்டையை பணம் கேட்டு செல்லும் இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதனை உங்களது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும். உங்களுக்கு வேண்டிய கடன் தொகை கண்டிப்பாக கிடைக்கும். நீங்கள் கேட்ட பணம் கிடைத்தவுடன் அதில் உள்ள வெந்தயத்தை ஏதேனும் ஒரு நீர் நிலைகளில் கொட்டிவிட வேண்டும். மீண்டும் பணம் தேவைபட்டால் இதனை முயற்சி செய்ய வேண்டும்.
வார வாரம் புதன்கிழமை அன்று புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் உங்கள் தொழில் நல்ல விதமாக நடக்கும். முக்கியமான விஷயம் இந்த பரிகாரத்தை நல்லதுக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும். கேட்டதை மனதில் நினைத்துக்கொண்டு வழிபட்டால் பலன் கிடைக்காது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025